January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”போர் பீதியை ஏற்படுத்த வேண்டாம்”: மேற்குலக நாடுகளை வலியுறுத்தும் யுக்ரைன்!

Photo: twitte/ ZelenskyyUa

தமது நாட்டில் போர் பீதியை ஏற்படுத்த வேண்டாம் என்று மேற்குலக நாடுகளுக்கு யுக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யுக்ரைனின் எல்லைகளைச் சுற்றி ஒரு லட்சம் ரஷ்ய ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்தப் பகுதியில் போர் மூளுவதை தடுக்க அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நட்பு நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் யுக்ரைனில் உள்ள தமது நாட்டு பிரஜைகளை மீள அழைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் குறித்த நாடுகள் தமது பிரஜைகளை மீள அழைக்கும் முடிவு தவறானது என்றும், இவ்வாறு செய்து போர் பீதியை ஏற்படுத்திவிட வேண்டாம் என்றும் யுக்ரைன் அதிபர் வலியுறுத்தியுள்ளார்.

போர் அச்சம் காரணமாக யுக்ரைனின் பொருளாதாரம் மற்றும் நிதித்துறை பாதிக்கப் பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை பெப்ரவரி மாதத்தில் யுக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பதற்கான தெளிவான வாய்ப்புகள் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார். இவ்வாறான நோக்கங்கள் இருந்தால் அதனை கைவிட வேண்டும் என்று அவர் ரஷ்யாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

எனினும் போர் தொடுக்கும் என்னத்தில் தாம் செயற்படவில்லை என்று ரஷ்ய அதிபர் புட்டின் கூறியுள்ளார்.