January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆப்பிரிக்க நாடுகளை தாக்கிய ‘அனா’: பலர் பலி!

தெற்கு ஆப்பிரிக்க நாடுகளை தாக்கிய ‘அனா’ எனும் வெப்ப மண்டல புயலால் 70 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

புயலுடன் உண்டான பலத்த மழையால் அந்த நாடுகளில் பிரதேசங்கள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த புயல் மற்றும் மழை வெள்ளத்தால் தீவு நாடான மடகாஸ்கரில் குறைந்தது 48 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அத்துடன் மலாவியில் 11 பேரும், மொசாம்பிக்கில் 18 பேரும் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை மேலும் பலர் காணாமல் போயுள்ளதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் அந்த நாடுகளில் இலட்சக் கணக்காண குடும்பங்கள் தமது வாழ்விடங்களை இழந்து இடம்பெயர்ந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.