இன்று பிரான்சின் நீஸ் நகரில் பயங்கரவாத செயலில் ஈடுபட்டு மூவரை கொலை செய்த நபர் துனிசியா நாட்டைச் சேர்ந்தவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
21 வயதான பிரஹீம் அவுசா ஓய் என்ற நபரே இந்த தாக்குதல்தாரி என்றும் அவர் கடந்த ஒக்டோபர் மாதமே பிரான்ஸ் வந்தவர் எனவும் கூறப்படுகின்றது.
சந்தேக நபர் இத்தாலியின் லபெடுசா தீவில் செப்டம்பர் மாதம் தரையிறங்கி,அங்கு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்ட பின்னர், ஒக்டோபர் ஆரம்பத்தில் பிரான்ஸ் வந்திருந்தார் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
தாக்குதலை மேற்கொண்ட குறித்த நபர் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் செய்து, அவரை உயிருடன் பிடித்துள்ளனர் என நீஸ் நகரின் மேயர் கிறிஸ்டியன் எஸ்டிரோசி உறுதிசெய்துள்ளார்.
பயங்கரவாத செயலில் ஈடுபட்ட நபர் ‘அல்லாகு அக்பர்’ என கோசமிட்டதாகவும் மேயர் கிறிஸ்டியன் மேலும் தெரிவித்துள்ளார்.