April 30, 2025 21:32:56

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரஷ்ய ஜனாதிபதிக்கு அமெரிக்க ஜனாதிபதி எச்சரிக்கை!

File Photo

யுக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின் மீது தடைகளை விதிக்க நேரிடலாம் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.

யுக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்களை நடத்தி அங்கு அத்துமீறுமாக இருந்தால் அது தொடர்பில் நடவடிக்கைகளை எடுப்போம் என்றும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

யுக்ரைன் எல்லைகளில் ரஷ்யா இராணுவத்தினர் நிலைநிறுத்தப்பட்டதை தொடர்ந்து யுக்ரைன் மீது அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

இதன்போது, யுக்ரைன் மீதான ரஷ்யாவின் ஊடுறுவல்களை அங்கீகரிக்க மாட்டோம் என்று அமெரிக்க அறிவித்துள்ளது.

எனினும் தம்மீதான குற்றச்சாட்டை நிராகரிப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறியிருந்தார்.

தனது படைகள் பயிற்சியின் காரணமாக அங்கு நிறுத்தப்பட்டுள்ளன என்றும், தங்களது மண்ணில் எங்குவேண்டுமானாலும் படைகளை நிறுத்தும் உரிமை தங்களுக்கு உள்ளது என்றும் ரஷ்ய அதிபர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தற்போது யுக்ரைனில் உள்ள தமது நாட்டு தூதரக அதிகாரிகளை மீள அழைக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளன.

இதனை தொடந்து யுக்ரைன் விவகாரத்தில் உலக நாடுகளிடையே பதற்றமான நிலைமை காணப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி நடத்திய செய்தியாளர் சந்திப்பில் ரஷ்ய அதிபர் மீது தனிப்பட்ட தடைகளை விதிக்க முடியுமா என்று கேள்வியெழுப்பப்பட்ட போது, ‘யுக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தினால் அதை செய்வதைப் பரிசீலிப்போம் என்று தெரிவித்துள்ளார்.