ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான புர்கினா பாசோவின் ஆட்சியை அந்நாட்டு இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர்.
இராணுவப் புரட்சி மூலம் ஜனாதிபதி ரோச் கபோரேவை பதவி நீக்கி ஆட்சியை கைப்பற்றியுள்ளதாக அந்நாட்டு இராணுவத் தளபதி அரச ஊடகத்தின் ஊடாக அறிவித்துள்ளார்.
அந்நாட்டில் ஏற்பட்ட இஸ்லாமிய கிளர்ச்சியை ஜனாதிபதி தடுக்கத் தவறியுள்ளதாக அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையிலேயே ஆட்சியை இராணுவத்தினர் கைப்பற்றியுள்ளனர்.
இதன்போது இராணுவத்தினரால் ஜனாதிபதி ரோச் கபோரே கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் எங்கு இருக்கின்றார் என்ற தகவல்கள் வெளியாகவில்லை என்றும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எனினும் அவர் தடுப்புக் காவலில் பாதுகாப்பாக இருப்பதாக இராணுவத் தளபதி தொலைக்காட்சியில் உரையாற்றும் போது குறிப்பிட்டுள்ளார்.