பொருளாதார நெருக்கடி நிலைமையால் ஆப்கானிஸ்தானில் உணவுப் பொருட்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதனால் அங்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளதுடன் பெருமளவான மக்கள் பட்டினியால் வாடும் நிலை உருவாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அமெரிக்கப் படைகள் வெளியேறிய பின்னர் ஆப்கானிஸ்தானை முழுமையாக தாலிபான்கள் கைப்பற்றினர்.
இதனையடுத்து ஆப்கானிஸ்தானுக்கான வெளிநாடுகளின் உதவிகள் நிறுத்தப்பட்டது. இதன்போது தாலிபான்களால் அங்கு பொருளாதாரம் தொடர்பில் சரியான திட்டமிடல்களை முன்னெடுக்க முடியாத நிலைமை உருவாகியிருந்தது.
இதனால் ஆப்கானிஸ்தான் மக்கள் உணவு பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ளனர்.
அமெரிக்கா, இந்தியா, சீனா உள்பட பல்வேறு நாடுகளிடம் தலிபான்கள் உதவி கோரியுள்ளனர்.
இந்நிலையில் தங்களுக்கு உதவுமாறு கோரி தாலிபான்கள், நோர்வே அரசுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றனர். இதற்காக தாலிபான்கள் உயர்மட்டக் குழுவொன்று நோர்வே பயணமாகியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.