Photo: Facebook/ jacindaardern
கொவிட் பரவலால் பாதிக்கப்பட்டுள்ள தனது நாட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் வரையில் தனது திருமணத்தை நடத்தப் போவதில்லை என்று நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்னுக்கும் அவரது நீண்ட கால நண்பரான கிளார்க் கேஃபோர்ட்டுக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்னா் திருமண நிச்சயதாா்த்தம் நடைபெற்றது.
இதன்படி எதிர்வரும் பெப்ரவரி மாதத்தில் தமது திருமண நிகழ்வை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்த நிலையில், நியூசிலாந்தில் ஒமிக்ரோன் பரவல் ஆரம்பித்துள்ளது.
இதையடுத்து மக்களுக்காக தன் திருமணத்தை நிறுத்தப்போவதாக பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் அறிவித்துள்ளார்.
”மக்கள் துயரத்தில் இருக்கும்போது திருமணம் செய்ய இயலாது என் திருமணம் இப்போதைக்கு நடைபெறபோவதில்லை. இது தான் வாழ்க்கை. நாம் எதிர்பார்ப்பது எப்போதும் நடைபெறும் என்று சொல்ல முடியாது. எனக்கும் நியூசிலாந்து மக்களுக்கும் நானும் ஒன்றே” என்று கூறியுள்ளார்.
உலக நாடுகளில் கொரோனாவை சிறப்பாக எதிர்கொண்ட தலைவர் என்ற பெருமையை நியூசிலாந்து பிரதமர் பெற்றுள்ளார்.
நியூசிலாந்தில் இதுவரை மொத்தமாக 15,550 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதுடன் தொற்றால் 52 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர்.