November 21, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”கொவிட் பரவல் இப்போதைக்கு முடிவுக்கு வர வாய்ப்பில்லை”: உலக சுகாதார அமைப்பு

உலக நாடுகளில் கொவிட் வைரஸ் தொற்றுப் பரவல் இப்போதைக்கு முடிவுக்கு வர வாய்ப்பில்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள ஒமிக்ரோன் திரிபுக்கு பின்னரும் புதிய திரிபுகள் பரவ வாய்ப்பு உள்ளது என்றும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

ஒமிக்ரோன் தீவிரம் குறைந்ததாக இருப்பதாக கூறினாலும் அது உயிராபத்தை ஏற்படுத்தக் கூடியதே என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கூறியுள்ளார்.

கொரோனா தொற்றின் முதல் கட்டத்தில் உலகம் இன்னும் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் உலக நாடுகள் தொடர்ந்தும் சுகாதார அறிவித்தல்களை பின்பற்ற வேண்டும் என்பதுடன், தடுப்பூசிகள் தொடர்பான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்றும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.