January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அபுதாபி விமான நிலையத்தை இலக்கு வைத்து ‘ட்ரோன்’ தாக்குதல்!

ஐக்கிய அரபு இராச்சிய தலைநகர் அபுதாபி விமான நிலைய பகுதியில் ‘ட்ரோன்’ மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் விமான நிலையத்தில் உள்ள 3 எரிபொருள் தாங்கிகள் எரிந்துள்ளதுடன், மூவர் உயிரிழந்துள்ளதாக அபுதாபி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்தத் தாக்குதலுக்கு யேமனில் இருந்து இயங்கும் இரான் ஆதரவு அமைப்பான ‘ஹவுத்தி’ பொறுப்பேற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

இதேவேளை இந்த சம்பவத்தை தொடர்ந்து அபுதாபி விமான நிலையத்தில் விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.