February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஹைட்டி ஜனாதிபதி கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது!

ஹைட்டி ஜனாதிபதி ஜொவெனெல் மொய்ஸின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அந்நாட்டின் முன்னாள் செனட்டர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனவரி 14 ஆம் திகதி, ஜமைக்கா பாதுகாப்பு தரப்பினரால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

ஹைட்டியின்  தலைநகர் ஒவ் ஸ்பெய்னில் 2021 ஜுலை 7 ஆம் திகதி அதிகாலை வேளையில் ஆயுதக் குழுவொன்றினால் அந்நாட்டு ஜனாதிபதி ஜொவெனெல் மொய்ஸ் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள் உள்ளிட்ட பலர் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.