January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஐரோப்பாவில் மீண்டும் கொவிட் அலை: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

ஐரோப்பாவில் அடுத்துவரும் சில வாரங்களில் கொவிட் தொற்று தீவிரமாக அதிகரிக்கும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

குறிப்பாக அடுத்த 8 வாரங்களுக்குள் ஐரோப்பாவில் பெருமளவானவர்கள் ஒமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்படலாம் என்று உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய பிராந்தியத்துக்கான இயக்குநர் மருத்துவர் ஹான்ஸ் க்ளூஜ் தெரிவித்துள்ளார்.

இந்த வருடத்தின் முதல் வாரத்திலேயே ஐரோப்பா நாடுகளில் 70 லட்சம் பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு காலங்களில் மக்கள் அதிகளவில் ஒன்றுகூடியதனாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலைமையிலேயே உலக சுகாதார அமைப்பு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இதேவேளை அமெரிக்கா, இந்தியா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் தற்போது கொவிட் தொற்றாளர்கள் எண்ணிக்கை தீவிரமாக அதிகரித்துச் செல்வதாக சுகாதார தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.