January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரேசில் ‘பர்னாஸ்’ நீர்வீழ்ச்சி பகுதியில் பாறை உடைந்து விழுந்ததில் பலர் பலி!

பிரேசில் நாட்டின் கேபிடோலியோவில் உள்ள ‘பர்னாஸ்’ நீர்வீழ்ச்சி பகுதியில் கற்பாறையின் பகுதியொன்று உடைந்து விழுந்ததால் சுற்றுலாப் பயணிகள் பலர் உயிரிழந்துள்ளனர்.

சனிக்கிழமை மாலை, மோட்டார் படகுகள் மூலம் அந்தப் பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் சென்றிருந்த நிலையில், அங்குள்ள உயரமான மலைப்பகுதியில் இருந்து பாறை ஒன்று உடைந்து மூன்று படகுகள் மீது விழுந்ததுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த விபத்தில் சிக்கிய 7 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், மேலும் 20 பேர் வரையிலானோர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை இந்த சம்பவத்தில் 32 பேர் படுகாயமடைந்த நிலையில் மீட்புப் பணியாளர்களினால் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்குள்ள பாறை சுவர்கள், குகைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளைக் காண சுற்றுலாப் பயணிகள் குவிந்திருந்த நிலையில் நிகழ்ந்த இந்த விபத்து குறித்த வீடியோக்காட்சிகள் சமுக வளைதளங்களில் பகிரப்படுகின்றன.