பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவு காரணமாக, 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
வீதிகளில் பயணித்த வாகனங்களிலேயே இந்த உயிரிழப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
முர்ரி மலைப்பிரதேசம், குளிர்காலங்களில் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.
இந்நிலையில் அந்தப் பகுதியில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவு காரணமாக, அங்கு வந்தவர்கள் வாகனங்களுக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்தப் பிரதேசத்தில் தொடர்ந்தும் மீட்புப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
கடும் பனிப் பொழிவு காரணமாக, தங்கள் வாகனங்களுக்குள் பயணிகள் இருந்த நிலையில், அவர்கள் வெளியே வர முடியாதளவுக்கு பனியால் வாகனங்கள் மூடப்பட்டதால் அவர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றன.