January 20, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமெரிக்காவில் தொடர்மாடி குடியிருப்பொன்றில் தீ: 13 பேர் பலி!

அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் தொடர்மாடி குடியிருப்பொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிழந்தவர்களில் 8 சிறுவர்கள் அடங்குவதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தொடர்மாடி குடியிருப்பின் இரண்டாவது மாடியில் முதலில் தீ பரவியதாக சம்பவத்தை நேரில் பார்த்தோர் தெரிவித்துள்ளனர்.

இதன்போது அங்குள்ள குடியிருப்புகளில் 26 பேர் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எவ்வாறு இந்த தீ விபத்து ஏற்பட்டது என்பதற்கான காரணம் கண்டறியப்படவில்லை. சம்பவம் குறித்து அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.