February 22, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மக்கள் போராட்டத்தால் கசகஸ்தான் அமைச்சரவை இராஜினாமா!

கசகஸ்தானில் மக்கள் போராட்டங்களை தொடர்ந்து அந்நாட்டு அமைச்சரவை இராஜினாமா செய்துள்ளது.

அமைச்சரவையின் இராஜினாமாவை தான் ஏற்றுக்கொண்டுள்ளதாக கசகஸ்தான் ஜனாதிபதி ஜொமார்ட் டொகயேவ் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் முன்னெடுத்துவந்த போராட்டங்கள் வலுப்பெற்றதை தொடர்ந்து அமைச்சரவை பதவி விலகத் தீர்மானித்துள்ளது.

தொடர்ச்சியாக மக்கள் வீதிகளில் போராட்டங்களை முன்னெடுத்து வந்த காரணத்தினால் அங்கு இரண்டு வார காலத்திற்கு அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் அங்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை தொடர்ந்து அமைச்சரவை பதவி விலகத் தீர்மானித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதியின்மைக்கு பொறுப்பேற்று இராஜினாமா செய்வதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.