June 13, 2025 3:46:13

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமெரிக்க செயற்கைகோள் நிறுவனம் மீது சீனா குற்றச்சாட்டு!

அமெரிக்காவின் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்தினால் விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ள செயற்கைகோள்கள், தங்களது விண்வெளி நிலையத்தின் மீது மோதுவது போல் வந்ததாக சீனா குற்றஞ்சாட்டியுள்ளது.

இது தொடர்பில் சீனா அரசாங்கத்தினால் ஐநாவிலும் முறையிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பிரபல தொழில் அதிபர் எலான்மஸ்க் தனது நிறுவனமான ‘ஸ்பேஸ் எக்ஸ்’ மூலம் ஏராளமாக செயற்கைகோள்களை விண்ணுக்கு அனுப்பியுள்ளார்.

இணையதள சேவை உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்காக செலுத்தப்பட்டுள்ள செயற்கை கோள்கள் புவிவட்டப் பாதையில் தற்போது சுற்றி வருகின்றன.

இந்நிலையில் கடந்த ஜூலை முதலாம் திகதியும், அக்டோபர் 21 ஆம் திகதியும் தங்களது விண்வெளி நிலையத்தின் அருகே 2 முறை மோதுவது போல் அந்த செயற்கைகோள்கள் வந்ததாக சீனா குற்றம் சுமத்தி உள்ளது.

இது தொடர்பாக ஐநாவில் முறையிட்டுள்ள சீன அதிகாரிகள், குறித்த அமெரிக்க நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.