November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஒமிக்ரோன்’: பிரான்ஸில் இறுக்கமடையும் கட்டுப்பாடுகள்!

‘ஒமிக்ரோன்’ தொற்றுப் பரவல் அச்சம் காரணமாக பிரான்ஸில் சுகாதார கட்டுப்பாடுகளை கடுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு அந்நாட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கொரோனாவின் டெல்டா திரிபைவிடவும் ‘ஒமிக்ரோன்’ திரிபு 70 மடங்கு வேகமாக பரவும் தன்மையை கொண்டுள்ளதாக சுகாதார துறையினர் எச்சரித்துள்ளனர்.

இதனால் நாடுகள் பல தற்போது நடைமுறையில் உள்ள கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை கடுமையாக்கியுள்ளன.

இந்நிலையில் ஜனவரி 3 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பிரான்ஸில் கட்டுப்பாடுகளை இறுக்கமாக நடைமுறைப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதன்படி சமூக இடைவெளியை பேணுதல், வீட்டில் இருந்து பணியாற்றுதல் ஆகியவற்றை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மறு அறிவித்தல் வரையில் இரவு நேர களியாட்ட விடுதிகளை மூடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதேவேளை மக்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகள் பலவற்றுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன.

பிரான்ஸில் கடந்த சனிக்கிழமை, தினசரி கொவிட் தொற்றாளர்கள் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை கடந்ததை தொடர்ந்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.