January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பேராயர் டெஸ்மண்ட் டுட்டு காலமானார்

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற, தென்னாபிரிக்க பேராயர் எமரிட்டஸ் டெஸ்மண்ட் டுட்டு காலமானார்.

கேப்டவுணில் ஞாயிற்றுக்கிழமை, தனது 90 ஆவது வயதில் டெஸ்மண்ட் டுட்டு  காலமானதாக தென்னாபிரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1931 ஆம் ஆண்டு கிளர்க்ஸ்டோர்ப்பில் பிறந்த டெஸ்மண்ட் டுட்டு, தென்னாபிரிக்காவில் நிறவெறியை முடிவுக்கு கொண்டு வருவதற்காக போராடினார். இதற்காக அவருக்கு 1984 இல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இந்நிலையில் பேராயரின் மறைவு, நமது தேசத்தின் துக்கத்தின் மற்றொரு அத்தியாயமாகும் என தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா தெரிவித்துள்ளார்.