ஆபிரிக்க நாடான கொங்கோ ஜனநாயக குடியரசில் கிறிஸ்துமஸ் தினத்தில் உணவகம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர்.
இதேவேளை இந்த சம்பவத்தில் மேலும் பலர் காயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த உணவகத்தில் இடம்பெற்ற கிறிஸ்துமஸ் நிகழ்வில் பெருந்திரளானவர்கள் கலந்துகொண்டிருந்த போதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
உணவகத்தின் நுழைவாயிலில் தற்கொலை குண்டுதாரியை பொலிஸார் தடுத்து நிறுத்த முயன்றுள்ளதாகவும், இதன்போது தற்கொலை குண்டுதாரி குண்டை வெடிக்கச் செய்துள்ளதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த தாக்குதலை ‘அலைட் டெமாக்ரடிக் போர்சஸ்’ என்ற அமைப்பே நடத்தியுள்ளதாகவும், இது ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்புகளை பேணும் அமைப்பு என்றும் அந்நாட்டு பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.