கொவிட் வைரஸின் திரிபான ‘ஒமிக்ரோன்’ பரவல் தொடர்பில் உலக சுகாதார அமைப்பு ஐரோப்பிய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
‘ஒமிக்ரோன்’ வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதால் ஐரோப்பாவின் சுகாதார கட்டமைப்பு பெரும் நெருக்கடி நிலைக்கு தள்ளப்படலாம் என்று உலக சுகாதார அமைப்பின் உயர் அதிகாரிகளில் ஒருவரான ஹான்ஸ் குளூக் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய பிராந்தியத்தில் 38 நாடுகளில் ஒமிக்ரோன் பரவியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி இன்னுமொரு கொவிட் அலை உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளதால், நாடுகளின் அரசாங்கங்கள் அதை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என ஹான்ஸ் குளூக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கிறிஸ்துமஸ் மற்றும் புதுவருட கொண்டாட்டங்களால் வைரஸ் பரவல் தீவிரமடையலாம் என்று சுகாதார தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், நாடுகள் பல சமூக இடைவெளி தொடர்பான கட்டுப்பாடுகளை கடுமையாக்க நடவடிக்கை எடுத்துள்ளன.