மலேசியாவில் பெய்த கன மழையால் 8 மாகாணங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதன்போது அங்கு ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி இதுவரையில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை அங்கு 51 ஆயிரம் பேர் தங்களது வீடுகளில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக தலைநகர் கோலாலம்பூலிலும் மற்றும் சிலாங்கூர் மாநிலத்திலும் அதிகமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக மலேசிய ஊடகங்கள் கூறுகின்றன.
இந்நிலையில் இங்கு ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி பலர் காணமல் போயுள்ளதாகவும் இதனால் பலியானோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.