January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘சூப்பர் ராய்’ புயலால் பிலிப்பைன்ஸில் 200க்கும் மேற்பட்டோர் பலி!

பிலிப்பைன்ஸை கடந்த 16 ஆம் திகதி தாக்கிய ‘சூப்பர் ராய்’ புயலால் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரையில் 208 பேர் வரையிலானோர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மணிக்கு 195 கிலோமீட்டர் வேகத்தில் பிலிப்பைன்ஸின் தென் கிழக்கு தீவுகளில் ‘சூப்பர் ராய்’ புயல் வீசியுள்ளது.

இதனால் அங்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதுடன், 3 இலட்சத்திற்கும் அதிகமானோர் தமது இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர்.

இந்நிலையில் புயலில் சிக்கியவர்களில் 208 பேர் வரையிலானோர் உயிரிழந்துள்ளதுடன், 52 பேர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

இதேவேளை இதன்போது 239 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மீட்புக் குழுவினர் அங்கு தொடர்ந்தும் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.