January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உக்ரைன் மீதான அழுத்தங்களைக் குறைப்பதற்கு நிபந்தனைகளை முன்வைத்தது ரஷ்யா

உக்ரைன் மீதான அழுத்தங்களைக் குறைப்பதற்கு ரஷ்யா அமெரிக்காவிடம் நிபந்தனைகளை முன்வைத்துள்ளது.

உக்ரைன் எல்லைப் பகுதிகளில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான ரஷ்ய இராணுவம் குவிக்கப்பட்டதில் இருந்து அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

உக்ரைன் மீது படையெடுத்தால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டிவரும் என்று அதிகமான மேற்கு நாடுகள் ரஷ்யாவை எச்சரித்துள்ளன.

இந்நிலையில், கிழக்கு ஐரோப்பா நாடுகளில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ இராணுவக் கூட்டுப் படையின்; செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று ரஷ்யா கேட்டுக்கொண்டுள்ளது.

தாம் உக்ரைனைத் தாக்குவதில்லை என்று ரஷ்யா கூறி வந்தாலும், அங்கு அமைதியின்மை தொடர்கிறது.

ரஷ்யாவின் நிபந்தனையை அமெரிக்கா தலைமையிலான நாடுகள் ஏற்றுக்கொள்ள வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.

இதேநேரம், அமெரிக்காவுடன் அவசர பேச்சுக்குத் தயார் என்றும் ரஷ்யா குறிப்பிட்டுள்ளது.