
ஜப்பானின் ஒசாகா நகரத்தில் உள்ள கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் மரணமடைந்துள்ளனர்.
இந்த தீ விபத்து நாசகார முயற்சியா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அதிகமானோர் மூச்சுத் திணறலால் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
கட்டடத்தின் நான்காம் மாடியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதோடு, தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.
தீக்காயங்கள் மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.