May 24, 2025 11:55:25

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அவுஸ்திரேலியாவில் பாலர் பாடசாலையில் ஏற்பட்ட விபத்தில் 5 சிறுவர்கள் மரணம்

அவுஸ்திரேலியாவில் சிறுவர்கள் துள்ளி விளையாட்டு கோபுரம் விபத்துக்குள்ளானதில் 5 சிறுவர்கள் மரணமடைந்துள்ளனர்.

சிறுவர்கள் விளையாடும் காற்று நிரப்பப்பட்ட கோபுரம் மேல் நோக்கி வீசப்பட்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

டாஸ்மேனியாவில் உள்ள பாலர் பாடசாலை ஒன்றின் விளையாட்டுப் பூங்காவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மேலும் நான்கு சிறுவர்கள் காயமடைந்துள்ளனர்.

சிறுவர்கள் 10 மீட்டர் உயரத்தில் இருந்து கீழே விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த மற்றும் உயிரிழந்த சிறுவர்களில் ஆண், பெண் என இருபாலாரும் உள்ளடங்குகின்றனர்.

இந்த விபத்து நினைத்துப் பார்க்க முடியாதளவுக்கு சோகமான சம்பவம் என்று அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கோட் மொரிசன் குறிப்பிட்டுள்ளார்.