உக்ரைனைத் தாக்கினால் ரஷ்யா மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உக்ரைன் எல்லைப் பகுதிகளில் ரஷ்ய படைகள் குவிக்கப்பட்டு வரும் நிலையில், பல்வேறு மேற்கு நாடுகளும் ரஷ்யாவை எச்சரித்துள்ளன.
பிரசல்ஸில் நடைபெற்ற ஐரோப்பிய ஆணைக்குழுவின் மாநாட்டில் ரஷ்யாவை எச்சரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தாம் உக்ரைனைத் தாக்குவதற்குத் தயாராகவில்லை என்று ரஷ்யா உறுதியாகக் கூறியுள்ளது.
எனினும், ரஷ்யா உக்ரைனைத் தாக்கத் திட்டம் தீட்டுவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட ரஷ்ய படையினர் உக்ரைன் எல்லைகளில் குவிக்கப்பட்டுள்ளதாக மேற்கு நாடுகளின் புலனாய்வுப் பிரிவுகள் தெரிவித்துள்ளன.