April 29, 2025 15:07:56

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஹொங்கொங் உலக வர்த்தக மையத்தில் தீப்பரவல்; மாடியில் சிக்கிக்கொண்டோரை மீட்க முயற்சி

ஹொங்கொங் உலக வர்த்தக மையத்தில் திடீரென்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

தீப்பரவலைத் தொடர்ந்து உலக வர்த்தக மையத்தில் இருந்தவர்கள் கட்டடத்தின் மாடியில் சிக்கிக்கொண்டுள்ளனர்.

தீப்பரவலில் 8 பேர் காயமடைந்து, மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்தில் இருந்து 150 க்கு மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டதாகவும், மேலும் 350 க்கு அதிகமானவர்கள் கட்டடத்தின் மாடியில் சிக்கிக்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கட்டடத்தில் திருத்தப் பணிகள் இடம்பெற்று வரும் நிலையில், தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரியவருகிறது.

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் தொடர்வதாக ஹொங்கொங் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.