July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘ஒமிக்ரோன் வைரஸ் கணிக்க முடியாத அளவுக்கு தீவிரமாகப் பரவுகிறது’: உலக சுகாதார ஸ்தாபனம்

கொரோனா வைரஸின் புதிய திரிபான ஒமிக்ரோன் கணிக்க முடியாத அளவுக்கு தீவிரமாகப் பரவுவதாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது.

உலக வைரஸ் பரவலின் நிலவரங்கள் குறித்து அறிவிக்கும் போது, உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரையில் ஒமிக்ரோன் வைரஸ் 77 நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒமிக்ரோன் மேலும் பல நாடுகளுக்கு பரவியும், கண்டறியப்படாத நிலையில் இருக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஒமிக்ரோனைக் கட்டுப்படுத்த போதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமை கவலையளிப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.