இஸ்லாமிய மதத்தை கடுமையாக தாக்கும் மேற்குலக நாடுகள் மீண்டும் சிலுவை போரை ஆரம்பிக்க விரும்புகின்றன என துருக்கியின் ஜனாதிபதி தயீப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
துருக்கி நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
துருக்கிக்கும் பிரான்சிற்கும் இடையில் கடும் நெருக்கடியை உருவாக்கியுள்ள முகமது நபியின் கேலிச்சித்திரம் குறித்து குறிப்பிட்டுள்ள துருக்கி ஜனாதிபதி, நான் அதனை பார்க்க கூட விரும்பவில்லை. ஒழுக்க நெறியற்ற பிரசுரத்தை பார்வையிடுவது கூட தவறு என நான் கருதுகின்றேன் என தெரிவித்துள்ளார்.
என் மீதான தாக்குதல் காரணமாக நான் சீற்றமடையவில்லை. முகமது நபியை அவமதித்ததன் காரணமாகவே நான் சீற்றமடைந்துள்ளேன்.
மேற்குலகம் மீண்டும காட்டுமிராண்டித்தனம் நிலவிய யுகத்திற்கு செல்கின்றது. மேற்குலகம் சிலுவை போரை மீண்டும் ஆரம்பிக்க விரும்புகின்றது.வெறுப்பினதும் தீமையினதும் விதைகள் முஸ்லீம் மண்ணின் மீது விழத்தொடங்கியுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.