
பிராந்தியத்தில் சீனாவின் எழுச்சிக்கு எதிராக பலமான இந்தோ- பசுபிக் உறவுகள் தேவை என்று அமெரிக்க இராஜாங்க செயலாளர் என்டனி பிலிங்கன் தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியாவுக்கு விஜயம் செய்துள்ள என்டனி பிலிங்கன், பிராந்திய ஒத்துழைப்புகள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் அத்துமீறல்கள் அதிகரித்து வருவதாக அவர் கவலை தெரிவித்துள்ளார்.
சீனாவுக்கு எதிராக இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்கா அதன் இராணுவ மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்திக்கொள்ள எதிர்பார்ப்பதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் தெரிவித்துள்ளார்.
அனைத்து நாடுகளினதும் உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவே விதிமுறைகளுடன் செயற்படுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.