photo : twitter/Kentucky Guard
அமெரிக்கா, கென்டக்கி மாநிலத்தை தாக்கிய சக்திவாய்ந்த சூறாவளியால் இறந்தவர்களின் எண்ணிக்கை 100 ஐ விட அதிகரிக்கலாம் என மாநிலத்தின் ஆளுநர் ஆண்டி பெஷியர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் மேற்கு வேர்ஜினியாவுக்கு மேற்கில் அமைந்துள்ள கென்டக்கி மாநிலத்தை கடந்த சனிக்கிழமை மணித்தியாலத்திற்கு 365 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி தாக்கியது.
இதன் காரணமாக பல நகரங்கள் பெறும் சேதங்களுக்கு உள்ளானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே அங்கு 70 பேர் வரை உயிரிழந்திருக்குலாம் என தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 100ஐ கடக்கும் என அதன் ஆளுநர் ஆண்டி பெஷியர் தெரிவித்தார்.
மாநிலத்தின் வரலாற்றில் இது மிகவும் அழிவை ஏற்படுத்திய சூறாவளி நிகழ்வு என்றும், குறைந்தது 80 இறப்புகள் உறுதிப்படுத்தப்பட்டதாகவும் ஆண்டி பெஷியர் கூறியுள்ளார்.
இந்தோடு கென்டக்கியை அண்மித்த மேலும் நான்கு மாநிலங்களில் 14 இறப்புகள் பதிவாகியுள்ளன. உயிரிழப்புகளின் எண்ணிக்கை தெளிவாகத் தெரியவில்லை என்றாலும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மீட்புப் பணியாளர்கள் சேதமைந்த பகுதிகளை சீர் செய்யும் பணிகயை விரைவுபடுத்தியுள்ளனர்.
இதேவேளை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கென்டக்கியில் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவியை வழங்க உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக, அமெரிக்காவில் 1925 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தாக்கிய சூறாவளியால் 695 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.