அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தில் வீசிய சூறாவளி காரணமாக 50க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கலாம் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சூறாவளி காரணமாக கென்டக்கியின் மேஃபீல்டில் உள்ள ஒரு மெழுகுவர்த்தி தொழிற்சாலைக்குள் கூரை இடிந்து விழுந்ததில் 100க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கலாம் என நியூயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
கென்டக்கி மாநிலத்தின் வரலாற்றின் மிக மோசமான சூறாவளி இது என அதன் ஆளுநர் கூறினார். அத்தோடு உயிரிழப்புகள் 70 முதல் 100 வரை இருக்கலாம் எனவும் அவர் அச்சம் வெளியிட்டுள்ளார்.
மாநிலத்தின் மேற்குப் பகுதிகளில் சூறாவளி “குறிப்பிடத்தக்க சேதத்தை” ஏற்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர். ஹாப்கின்ஸ் கவுண்டியில் பலத்த காற்றின் காரணமாக ரயில் தடம்புரண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் பல மாநிலங்களில் சூறாவளி பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. கென்டக்கியில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.