January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தென்னாபிரிக்க ஜனாதிபதி தன்னை தனிமைப்படுத்துவதாக அறிவித்தார்

தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோசா தன்னை தனிமைப்படுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி  ரமபோசா ஜொகனஸ்பேர்க்கின் ஹோட்டலொன்றில் கலந்துகொண்ட நிதி சேகரிப்பு நிகழ்வொன்றில்  பங்கேற்ற ஒருவர், கொரோனா வைரஸுக்கான அறிகுறிகளை வெளிப்படுத்தியுள்ளார் என தென்னாபிரிக்க ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட நிகழ்வில் கொரோனா வைரஸ் தொடர்பான விதிமுறைகள் இறுக்கமாக பின்பற்றப்பட்டன, உணவருந்தும்போதும் உரையாற்றும் போதும் மாத்திரம் ஜனாதிபதி முகக்கவசத்தை அகற்றினார் என ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

தென்னாபிரிக்காவின் கொரோனா வைரஸ் விதிமுறைகளின் படி வீட்டில் ஒருவர் தன்னை 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்வது அவசியம் இதற்கமையவே  ஜனாதிபதி தன்னை தனிமைப்படுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளார்.

இந்த செய்தி தென்னாபிரிக்க மக்கள் மத்தியில் குழப்பத்தையும் கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளதுடன் கொரோனா வைரஸுக்கு மத்தியில் விருந்துபசார நிகழ்வு அவசியமா என பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.