ஆப்கானிஸ்தானுக்கு அவசர நிதியுதவியாக 280 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்குவதற்கு உலக வங்கி தீர்மானித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் கடுமையான உணவுத் தட்டுப்பாடு நிலவும் நிலையில், உலக வங்கி இவ்வாறு நிதியுதவி வழங்க முன்வந்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் உணவுத் தட்டுப்பாடு மிக மோசமான நெருக்கடியாக மாறியுள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியமைத்ததைத் தொடர்ந்து, வெளிநாட்டு நாணய கையிருப்புகள் முடக்கப்பட்டன.
அமெரிக்காவில் ஆப்கானிஸ்தானின் 10 பில்லியன் டொலர் நாணய கையிருப்பு முடக்கப்பட்டுள்ளது.
உலக வங்கியின் நிதியுதவியில் 100 மில்லியன் டொலர் ஆப்கானில் யுனிசெப் அமைப்பின் செயற்பாடுகளுக்கும் 180 மில்லியன் டொலர் உலக உணவு ஸ்தாபனத்தின் செயற்பாடுகளுக்கும் பயன்படுத்தப்படவுள்ளன.