உக்ரைன் மீது அத்துமீறினால் பொருளாதார நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும் என்று ரஷ்யாவுக்கு பிரிட்டன் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜி7 வெளியுறவு அமைச்சர்களின் மாநாட்டில் பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் லிஸ் ட்ரூஸ் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன்- ரஷ்ய எல்லைப் பகுதிகளில் நாளுக்கு நாள் பதற்ற நிலை அதிகரித்து வருகின்றது.
பிரிட்டனும் அதன் நட்பு நாடுகளும் ரஷ்யா மீது நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாகவும் லிஸ் ட்ரூஸ் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யா உக்ரைன் மீது படையெடுப்பது பெரும் மூலோபாய ரீதியான தவறு என்று பிரிட்டன் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், தாம் உக்ரைன் மீது படையெடுக்கத் தயாராகவில்லை என்று ரஷ்யா குறிப்பிட்டுள்ளது.