தெற்கு மெக்சிகோவில் சரக்கு லொரியொன்று விபத்துக்கு உள்ளானதில் அதில் பயணித்த 54 பேர் உயிரிழந்துள்ளனர்.
சியாபாஸ் மாநில நகரை நோக்கி அந்த லொரியில் 107 பேர் சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.
அதன்போது அந்த லொரி கட்டுப்பாட்டை இழந்து, வீதியில் உள்ள நடைபாதை பாலத்தில் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
இவ்வேளையில் சம்பவ இடத்திலேயே 54 பேர் இறந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் 40 பேர் வரையிலானோர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து குறித்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், அந்த லொரியில் இருந்தவர்கள் மத்திய அமெரிக்காவில் இருந்து புலம்பெயர்ந்தவர்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
எவ்வாறாயினும் உயிரிழந்தவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று இன்னும் உறுதி செய்யவில்லை என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லொரியில் அதிகளவிலானவர்களை ஏற்றிச் சென்றதால் எடை தாங்காமல் வாகனம் கவிழ்ந்திருக்கலாம் என்று கூறப்படுகின்றது.