சீனாவின் ஒலிம்பிக்கை இராஜதந்திர ரீதியாக புறக்கணிக்கும் நாடுகளுடன் கனடாவும் இணைந்துகொண்டுள்ளது.
2022 ஆம் ஆண்டுக்குரிய குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் சீனாவின் பீஜிங் நகரில் நடைபெறவுள்ளன.
இந்நிலையில், குளிர்கால ஒலிம்பிக்கை இராஜதந்திர ரீதியாக புறக்கணிக்க தாமும் தீர்மானித்ததாக கனேடிய பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.
குளிர்கால ஒலிம்பிக்கைப் புறக்கணிப்பதாக அமெரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் ஏற்கனவே அறிவித்துள்ளன.
மனித உரிமை நிலைமைகள் மோசமடைந்து வருவதைக் காரணம் காட்டி பல்வேறு நாடுகளும் சீனாவைப் புறக்கணிக்க ஆரம்பித்துள்ளன.
குறித்த நாடுகளின் நடவடிக்கையை சீனா கண்டித்துள்ளது.