புதிய ஒமிக்ரோன் வைரஸுக்கு எதிராக தமது பூஸ்டர் டோஸ் செயலாற்றுவதாக பைசர் மற்றும் பயோன்டெக் தடுப்பூசி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
பூஸ்டர் டோஸ்கள் ஒமிக்ரோனுக்கு எதிராக வினைத்திறன் மிக்க விதத்தில் பாதுகாப்பளிப்பதாகவும் குறித்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
ஒரே அளவிலான நோயெதிர்ப்புச் சக்தியின் மூன்று டோஸ்கள் ஒமிக்ரோனுக்கு எதிராகவும், இரண்டு டோஸ்கள் ஏனைய திரிபுகளுக்கு எதிராகவும் செயற்படுவதாக புதிய ஆய்வொன்று தெரிவிக்கின்றன.
ஒமிக்ரோன் அடையாளம் காணப்பட்ட போது, தடுப்பூசிகள் செயற்படத் திணறுவதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்திருந்தது.
ஒமிக்ரோன் என்பது கொரோனா வைரஸின் இதுவரை அடையாளம் காணப்பட்ட மிக வீரியம் கொண்ட திரிபாகும்.
ஒமிக்ரோனுக்கு தடுப்பூசிகளைத் தயாரிப்பது குறித்தும் நிறுவனங்கள் கவனம் செலுத்தி வருகின்றன.