2022 ஆம் ஆண்டு சீனாவின் பீஜிங் நகரில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக்கை தாமும் இராஜதந்திர ரீதியாகப் புறக்கணிப்பதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.
குறித்த ஒலிம்பிக்கை தாம் புறக்கணிப்பதாக அமெரிக்கா நேற்று அறிவித்திருந்ததோடு, சீனா அதனைக் கண்டித்திருந்தது.
சீனாவின் மனித உரிமை நிலைமைகள் மோசமடைந்து வருவதைக் காரணம் காட்டியே அமெரிக்காவும் அவுஸ்திரேலியாவும் இவ்வாறு அறிவித்துள்ளன.
அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு தாம் பலமான எதிர் நடவடிக்கைகள் எடுப்பதாக சீன வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
தமது விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் விளையாட்டுகளில் கலந்துகொள்ளவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் அறிவித்துள்ளார்.