July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘உக்ரைனைத் தாக்கினால் கடுமையான நடவடிக்கையில் இறங்குவோம்’: புடினுக்கு பைடன் எச்சரிக்கை

ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்தால், கடுமையான நடவடிக்கைகளைச் சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி மற்றும் ரஷ்ய ஜனாதிபதி ஆகியோருக்கு இடையே நடைபெற்ற இணையவழி கலந்துரையாடலில் இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உக்ரைன்- ரஷ்ய அமைதியின்மை அதிகரித்து வரும் நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதோடு, குறித்த பிரச்சினையே சந்திப்பின் கருப்பொருளாகவும் அமைந்துள்ளது.

ரஷ்யா தமது எல்லையில் 94 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படைகளையும் நவீன ஆயுதங்களையும் குவித்து, தம்மை அச்சுறுத்துவதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.

இந்நிலையில், உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா களத்தில் குதித்துள்ளது.

எனினும், தாம் உக்ரைனைத் தாக்குவதில்லை என்று ரஷ்ய ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நேட்டோ படையினரின் ரஷ்யா நோக்கிய விரிவாக்கம் மற்றும் ஆயுதங்களை நிலைநிறுத்துவது குறித்து புடின் அமெரிக்காவிடம் உத்தரவாதம் கோரியுள்ளார்.