2022 ஆம் ஆண்டு சீனாவின் பீஜிங் நகரில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக்கை அமெரிக்கா இராஜதந்திர ரீதியாகப் புறக்கணிப்பதாக சீனா குற்றம்சாட்டியுள்ளது.
அமெரிக்காவின் புறக்கணிப்புக்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு தாம் பலமான எதிர் நடவடிக்கைகள் எடுப்பதாக சீன வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
சீனாவின் மனித உரிமை நிலைமைகள் காரணமாக தாம் பீஜிங் ஒலிம்பிக்குக்கு இராஜதந்திரிகளை அனுப்புவதில்லை என்று அமெரிக்கா அறிவித்ததைத் தொடர்ந்தே, இந்த முரண்பாட்டு நிலை ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க விளையாட்டு வீரர்கள் அரச ஆதரவுடன் செல்லலாம் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
சீனாவின் உய்குர் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
அமெரிக்காவின் மனித உரிமைக் குற்றச்சாட்டுக்களை சீனா மறுத்துள்ளது.