பிரிட்டன் கொரோனா பயணக் கட்டுப்பாடுகளிலும் நிறவெறி பாராட்டுவதாக நைஜீரியா விமர்சித்துள்ளது.
நைஜீரியாவை தொடர்ந்தும் பிரிட்டனின் கொவிட் பயண சிவப்புப் பட்டியலில் வைத்திருப்பதால், இந்த விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.
பயணக் கட்டுப்பாடுகளில் உலகளாவிய அணுகுமுறை ஒன்று இருக்க வேண்டுமே தவிர தெரிவு செய்த நாடுகளைக் குறிவைக்கும் நிலை இருக்கக் கூடாது என்று பிரிட்டனுக்கான நைஜீரிய தூதுவர் சரபா துன்ஜி தெரிவித்துள்ளார்.
ஆபிரிக்க நாடுகள் மீதான பயணக் கட்டுப்பாடுகள் நிறவெறியைப் பிரதிபலிப்பதாக நைஜீரியா சுட்டிக்காட்டியுள்ளது.
நைஜீரியாவில் இருந்து வரும் பயணிகள் ஹோட்டல்களில் அவர்களது சொந்த செலவில் 10 நாட்கள் வரை தனிமைப்படுத்தப்படுவது பாகுபாடாகும் என்று தூதுவர் சரபா துன்ஜி தெரிவித்துள்ளார்.
பயணக் கட்டுப்பாட்டில் நிறவெறி என்ற பிரயோகம் மோசமான சித்தரிப்பு என்று பிரிட்டன் தெரிவித்துள்ளது.