மியன்மாரின் பதவி கவிழ்க்கப்பட்ட ஜனாதிபதி ஆங் சான் சூசிக்கு நான்கு வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மியன்மாரின் இராணுவ அதிகாரிகள் ஊழல் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுக்களையும் ஆங் சான் சூசி மீது முன்வைத்துள்ளனர்.
கருத்து வேறுபாடுகளைத் தூண்டல் மற்றும் கொவிட் சட்டவிதிகளை மீறிய குற்றச்சாட்டுக்களின் கீழ் அவருக்கு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஆங் சான் சூசி மீதான குற்றச்சாட்டுக்களின் முதலாம் கட்ட விசாரணைகளிலேயே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அவர் மீதான அனைத்து குற்றச்சாட்டுக்களும் நிரூபிக்கப்படும் போது, ஆயள் தண்டனை வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆங் சான் சூசி பணம் மற்றும் தங்கத்தில் இலஞ்சம் பெற்றுக்கொண்டதாகவும் தேசத் துரோகம் செய்ததாகவும் இராணுவத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.