தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் பார்க் எனும் கிளர்ச்சிக் குழுவின் முன்னாள் தலைவர் வெனிசியூலாவில் கொல்லப்பட்டுள்ளார்.
வெனிசியூலாவின் அபுரே மாநிலத்தில் பதுங்கி, வாழ்ந்து வந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
எல் பைசா என அழைக்கப்படும் ஹெர்னான் டாரியோ வெலாஸ்குவெல் என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
இந்தக் கொலையை வெனிசியூலா ஊடகங்கள் அறிக்கையிட்டு இருந்தாலும், கொல்பிய இராணுவம் இதுகுறித்த தகவல் வெளியிடவில்லை.
எல் பைசாவைக் கொலை செய்தால், வெகுமதிகள் வழங்கப்படும் என்ற செய்தியால் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளது.
தாம் எல் பைசாவின் கொலை குறித்து மேலதிக தகவல்களைத் தேடி வருவதாக கொலம்பிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.