May 25, 2025 19:38:20

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்துக்கு விஜயம் செய்த பொம்பியோ

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்துக்கு இன்று விஜயம் செய்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை நினைவுகூர்ந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக அவரது விஜயம் அமைந்ததாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இதன்போது, 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் தமது அனுதாபத்தையும்  ஆதரவையும் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்திற்கெதிரான போராட்டத்தில் இலங்கை மக்களுடன் தாம் இருப்பதாகவும், மத பன்மைத்துவத்துக்கான தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதி செய்வதாகவும் பொம்பியோ இதன்போது தெரிவித்ததாக அமெரிக்கத் தூதரகம் குறிப்பிட்டுள்ளது.