July 3, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யுக்ரைன் விவகாரம்: அமெரிக்க – ரஷ்ய அதிபர்கள் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு!

File Photo

அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் காணொளி ஊடாக சந்திக்க உள்ளதாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

டிசம்பர் 7 ஆம் திகதி இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுக்ரைன் எல்லையில் ரஷ்யா இராணுவ வீரர்களை நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை தொடர்ந்தே இந்த சந்திப்புக்கு ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமது எல்லைப் பகுதியில் ரஷ்யாவினால் 94 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும், இது தமது நாட்டை ஆக்கிரமிக்கும் முயற்சியே என்றும் யுக்ரைன் அதிகாரிகள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

இது தொடர்பில், சில தினங்களுக்கு முன்னர் வெள்ளை மாளிகையில் இருந்து உரையாற்றிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், யுக்ரைன் மீதான ரஷ்யாவின் ஊடுறுவல்களை அங்கீகரிக்க மாட்டோம் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தம்மீதான குற்றச்சாட்டை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நிராகரித்திருந்தார்.

இவ்வாறான நிலைமையில் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடும் வகையில், இருவருக்கும் இடையே டிசம்பர் 7 ஆம் திகதி காணொளி ஊடாக சந்திப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.