May 29, 2025 21:56:31

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எரிமலை வெடிப்பு: இந்தோனேசியாவின் ஜாவா தீவு மக்கள் வெளியேற்றம்

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் உள்ள எரிமலை ஒன்று வெடிக்கும் அபாயம் உள்ளதால், அங்கிருந்து மக்கள் வெளியேற ஆரம்பித்துள்ளனர்.

எரிமலையில் இருந்து புகை வெளியேறத் தொடங்கியதை அடுத்து, மக்கள் அச்சத்தால் வெளியேறியுள்ளனர்.

செமேரு எனும் மழையில் உள்ள எரிமலை வெடிப்பதால் இரண்டு மாவட்டங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக தெரியவருகிறது.

ஆகாயத்தில் 15 ஆயிரம் மீட்டர் வரை புகை மண்டலம் ஏற்பட்டுள்ளதாக கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுவரையில் எவ்வித உயிரிழப்புகளும் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், மக்களை வெளியேற்றும் பணி தொடர்கிறது.