January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஊடுறுவல்களை அங்கீகரிக்க மாட்டோம்’: ஜோ பைடன் எச்சரிக்கை

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஊடுறுவல்களை அங்கீகரிக்க மாட்டோம் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் இருந்து உரையாற்றும் போதே, ஜோ பைடன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அயல் நாட்டை ஆக்கிமரிப்பது ரஷ்யாவின் நிலையை மிக மோசமாக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமது எல்லைப் பகுதிகளில் ரஷ்யா 94 ஆயிரத்துக்கும் மேற்பட்ட படையினரைக் குவித்துள்ளதாக உக்ரைன் குறிப்பிட்டுள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு 2022 ஆம் ஆண்டு ஆரம்ப பகுதியில் நடைபெறலாம் என்று அமெரிக்க புலனாய்வுத் துறையும் தகவல் வெளியிட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி பைடன் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி புடின் ஆகியோருக்கு இடையே இதுதொடர்பான இணையவழி கலந்துரையாடல் ஒன்றும் நடைபெறவுள்ளது.