கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை வழங்குவதற்கு ‘ஜிஎஸ்கே’ மாத்திரையைப் பயன்படுத்த பிரிட்டன் அங்கீகரித்துள்ளது.
பிரிட்டனின் மருந்து ஒழுங்குபடுத்தல் ஆணையகம் குறித்த மாத்திரையை அனுமதித்துள்ளது.
கொரோனா தொற்று அதிக பாதிப்பை ஏற்படுத்தியவர்களுக்கு க்லெக்சோ ஸ்மித் க்லைன் எனும் ஜிஎஸ்கே மாத்திரையை பயன்படுத்தப்படுகிறது.
ஜிஎஸ்கே மாத்திரை ஒமிக்ரோனுக்கு எதிராக செயற்படும் திறனைக் கொண்டுள்ளதாக மருந்து தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒமிக்ரோன் வைரஸ் பரவல் அபாயம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து கொரோனாவுக்கு சிகிச்சை அளிப்பதையும் தடுப்பூசி ஏற்றுவதையும் நாடுகள் தீவிரப்படுத்தியுள்ளன.