
வடக்கு நைஜீரியாவில் படகொன்று விபத்துக்கு உள்ளாகியதில் 29 மாணவர்கள் மரணமடைந்துள்ளனர்.
வடக்கு நைஜீரியாவின் கெனோ மாநிலத்தில் இந்தப் படகு விபத்து இடம்பெற்றுள்ளது.
படகில் 40 பேரளவில் பயணித்துள்ளதோடு, அதிகமானோர் மாணவர்களாவர்.
படகு வடரி எனும் கங்கையில் கவிழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் 7 மாணவர்கள் உயிர் தப்பியுள்ளதுடன் மீட்புப் பணி தொடர்கின்றது.